செவ்வாய், 12 மே, 2015

ரோஜா தோட்டத்தில் _ மஞ்சள் ரோஜா !


ரோஜாத் தோட்டத்தில் பூத்த பல வண்ண நிறங்களில் முதலில் மங்களகரமாக மஞ்சள் ரோஜா.  பார்த்ததும் 'பளிச்' என எங்களை ஈர்த்ததும் இந்த மஞ்சள் ரோஜாதான்.

தோட்டமாக இருப்பவை வீட்டுக்காரர் எடுத்தது. மற்றபடி சதுரம், செவ்வகமெல்லாம் படத்தை ட்ரிம் பண்ணும்போது காணாமலே போய்விட்டது.

                              மஞ்சளும் சிவப்பும் கலந்த ஏதோ ஒரு அழகு ரோஜ!

19 கருத்துகள்:

 1. வணக்கம்
  அழகிய படங்கள் இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உற்சாகமூட்டும் உடனடி வருகைக்கு நன்றி ரூபன் !

   நீக்கு
 2. வா..வ் சூப்பர்ர்ர்ர்!! ரோஜா. அழகே அழகு.!! என்னிடம் மஞ்சள் ரோஜா இல்லை. இம்முறை வாங்கிவைத்துள்ளேன். அதுவும் வளர்ந்து நல்லபடியா பூக்கனும்..
  ஷேடட் கலர் ரெம்ப பிடிக்கும். ஆனா அதிக விலை.அந்த விலை கொடுத்து வாங்கி,சரியா வராவிட்டால் கவலை.சாதாரண ரோஜாவே வைத்திருக்கேன்.
  ரெம்ப அழகா இருக்கு உங்க ரோஜா படங்கள் எல்லாமே சித்ரா. கடைசி பூ சூப்ப்ப்ப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்னும் பயப்பட வேணாம் ப்ரியா, நீங்க வேணா பாருங்க, கண்டிப்பா அழகழ‌கா மஞ்சள் ரோஜா பூத்து பதிவுல போடத்தான் போறீங்க.

   எனக்கு இங்கே செடி வாங்குவதைவிட அதற்கான தொட்டி வாங்குவதுதான் விலை அதிகமாப் போவும். அதனால நோ செடிகள்.

   வருகைக்கு நன்றி ப்ரியா.

   நீக்கு
 3. ஆஹா...சூப்பர் சித்ரா...

  மனம் கொள்ளை போனதே....

  படங்கள் அழகு.

  மஞ்சள் ரோஜா, மயக்குகிறதே...

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "மனம் கொள்ளை போகுது, மஞ்சள் ரோஜா மயக்குது " போன்ற வரிகள் என்னையும் மயக்கிடுச்சு.

   வருகைக்கு நன்றி உமையாள்.

   நீக்கு
 4. ஜூப்பர்...ஆனாலும் நீங்க தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்குப் போட்ட ரோஜாதான் டாப்பு...அத்த ஆருமே அடிச்சிக்க முடியாது-பா!! ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'அத்த ஆருமே அச்சிக்க முடியாது _ பா' _____ தபா தபா இதுமாரி சொல்றத நம்பி நேரா ஹாலிவுட்டுக்குப் படையெடுக்க‌லாமா, இல்லாங்காட்டி கோலிவுட் பாலிவுட் வழியா போலாமான்னு யோசிச்சினு _ கீறேன்.

   வெயில் இல்லாம இருக்கேன்னு நெனச்சித்தான் எடுத்தேன், அந்த ரோஜாவோட பேக்கிரவுண்டும் சேர்ந்து அழகா வந்திடுச்சு.

   நீக்கு
 5. மஞ்சக்காட்டு ரோஜா....மனதை அள்ளுது ஜோரா!!!!! நோ சான்ஸ்! அத்தனை அழகு! இயற்கையே இயற்கைதான் அதை விஞ்ச யாரால் முடியும்?!!! அருமை !!!

  கீதா அந்தப் படத்தில் யார் என்று கேட்டிருந்தீர்கள்!!! நாலடியார் கீதாவை பார்ப்பது என்பது கொஞ்சம் சிரமம்......சின்ன சைசை மைக்ரோ லென்ஸ் வைச்சுத்தான் கண்டுபிடிக்கணும்.....ம்ம்ம் என்ன பண்ண....!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாலடியாராக இருந்தாலும் எவ்வளவு விஷயங்கள் பொதிந்துள்ளன, அப்படித்தான் நீங்களும். இங்கு மட்டும் என்ன, நாலடியாருடன் ஒரு இஞ்ச் சேர்த்துக்க வேண்டியதுதான் ஹா ஹா ஹா !!

   கவிதை மாதிரியான பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி கீதா.

   நீக்கு
  2. ஓ அது சரி அப்ப நீங்களும் நம்ம கட்சிதானா.....

   நீக்கு
 6. படங்களை பார்க்கும்போது அப்படி ஒரு ஆனந்தம். ஒவ்வொரு படமும் அழகு, கட்டாயம் பாராட்டியாகவேண்டும் இந்த அழகான படங்களுக்காக உங்களை. lighta கொஞ்சம் பொறாமையா இருக்கு, நேரிலே பார்க்கமுடியவில்லையே என்று. என்ன பண்றது, உங்கள் வலைபூ மூலம் பார்க்க முடிந்தது நன்றி.

  " உங்கள் தமிழுக்க்காகவும், மஹியின் அழகான ( எங்க ஊரு சென்னை தமிழுக்காகவும் ) special பாராட்டு " .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரிக்கு வரியான பாராட்டு மழையில் நனைந்து ஜலதோஷமே புடிச்சாச்சு.

   நன்றி ராஜேஷ்.

   நீக்கு
 7. அழகான மஞ்சள் ரோஜாக்கள். கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பூக்களை ரசித்து பாராட்டியதற்கும் நன்றி தமிழ்முகில்.

   நீக்கு