Wednesday, April 30, 2014

எங்க ஸ்கூல், எங்க டீச்சர் !!

                                                                   படம் உதவி:கூகுள்

சென்ற வாரம் வியாழக்கிழமை(04/24/14) மதியம் 1:50 க்கெல்லாம் தயாராக இருந்தேன், எப்படியும் 1:51க்கு மகளிடமிருந்து ஃபோன் வருமென்று. ஆம், கல்லூரிக்கு போனபிறகு முதன்முதலாக அன்றுதான் அவளுக்குப் பிடித்த music வகுப்புக்கு போயிருக்கிறாள்.

புது இடம், புது சூழல் ....... சாப்பாடு உட்பட அனைத்தும் புதிது. நேரம் ஒத்து வராததால் முதல் இரண்டு quarter ரிலும் flute வகுப்பில் சேர முடியவில்லை. சூழ்நிலையை ஓரளவுக்கு சமாளிக்கக் கற்றுக்கொண்ட பிறகு முதல் flute class அன்றுதான் !

வாரத்தில் ஒருநாள் வியாழன் அன்று 1:00 முதல் 1:50 வரை ம்யூஸிக் வகுப்பு. முடிந்ததுமே 10 நிமிட இடைவேளையில் அடுத்த‌ வகுப்புக்குப் போக ...... இல்லையில்லை ஓட வேண்டும். ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு இடத்தில் !

முதல்நாள் ம்யூஸிக் வகுப்பு முடிந்தவுடன் என்னக் கூப்பிடுவாள் என்பது எனக்குத் தெரியும். அதனால் ஏற்கனவே அவளிடம் சொல்லி வைத்திருந்தேன், எல்லா வகுப்புகளும் முடிந்த பிறகுதான் என்னை அழைக்க வேண்டுமென்று.  இருந்தாலும் ம்யூஸிக் வகுப்பாயிற்றே ! உடனே கூப்பிடுவாள் என்றுதான் காத்திருந்தேன்.

நினைத்த மாதிரியே அழைப்பும் வந்தது.

"அம்மா,யூ நோ வாட்? " என்றாள் உற்சாகத்துடன்.

"எங்க புது ம்யூஸிக் டீச்சரைப் பற்றி உனக்கொரு சர்ப்ரைஸ், என்னன்னு சொல்லு பார்க்கலாம்" என்றாள் அதே உற்சாகத்துடன்.

ம்யூஸிக் டீச்சரைப் பற்றிய சர்ப்ரைஸ் என்றால் ........ ?

அவர் என்னுடைய வகுப்புத் தோழியாக இருந்திருக்கவும் சான்ஸ் இல்லை. நான் அவரது ஆசிரியையாகவோ அல்லது அவர் எனக்கு ஆசிரியையாகவோ இருந்திருக்கவும் சான்ஸேஏஏஏ இல்லை . ஏனென்றால் நான் ம்யூஸிக் வகுப்புக்கே போனதில்லை. விருப்பம் இருந்திருந்தாலும் வசதி வாய்ப்புகள் வாய்த்திருக்க வேண்டுமே !

"நேரமாகுது பாரு, நீயே சொல்லிடு" என்றேன்.

அவளும் ஓடிக்கொண்டே, "அம்மா, அவங்க எங்க 'ஹைஸ்கூல்'ல படிச்சாங்களாம்மா" என்றாள்.

"ஓ, அப்படியா ! எப்போ ?" என்றேன்.

"80 களில் படித்தார்களாம், நாங்க ரெண்டு பேரும் எங்க ஸ்கூலைப் பற்றி நிறைய பேசினோம், சரிம்மா, நேரமாயிடுச்சு, மீதி விஷயத்தை ஈவ்னிங் வந்து சொல்கிறேனே "  என்றாள் சந்தோஷமாக !

நானும் அவள் சந்தோஷத்தில் பங்குகொண்டு ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நாம் எல்லோருமே உறவுகளைத் தாண்டி சில விஷயங்களில், சிலவற்றில் உரிமை கொண்டாடத்தான் செய்கிறோம். அவற்றுள் நாம் படித்த பள்ளியும், நம்முடைய ஆசிரியரும் முதலிடம் பெறுவர்.

எத்தனை வருடங்களானாலும் 'எங்க ஸ்கூல், எங்க டீச்சர், எங்க க்ளாஸ் ரூம், எங்க காலேஜ்' என்றுதான் சொல்லுவோம்.

எங்கோ ஒரு மூலையில் இருந்து இங்கு வந்து, தான் படித்த இந்த ஊர் பள்ளியை மகள்  'எங்க ஸ்கூல்'  என்றதும் 'எவ்வளவு உரிமையுடன் சொல்கிறாள்' என்று நினைத்துக்கொண்டேன்.

பிறகு வீட்டுக்காரருக்கு மெஸேஜ் அனுப்பினேன், " நம்ம‌ பாப்பா ஸ்கூல்ல படிச்சவங்கதானாம், அவங்க ம்யூஸிக் டீச்சர்" என்று.

அட, இப்போது நான்கூட எங்க(!) பாப்பு படித்த‌ பள்ளியை உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டேனே !!

10 comments:

  1. :) இதெல்லாம் டீஃபால்ட்டா நம் மூளைக்குள் பதிக்கப்பட்ட உணர்வுகள் சித்ராக்கா! :)

    பை த வே, என்னவருக்கும் புல்லாங்குழல் மிகவும் பிடிக்கும். கல்லூரியில் படித்த சமயம் வீட்டிற்கு தெரியாமல் ஒரு பு.குழல் வகுப்பில் கூட சேர்ந்திருக்கிறார். விஷயம் தெரிந்ததும் "படிக்கற பையனுக்கு எதுக்கு புல்லாங்குழலெல்லாம்!!"நு சொல்லி எங்க மாமா தடா போட்டுட்டாராம்!!ஹ்ம்ம்ம்...!! இப்பவும் அவரா கத்துகிட்ட ஆர்வத்தில கொஞ்ச கொஞ்சம் வாசிப்பார். :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மகி, உண்மைதான்.

      ஊருக்குப் போய் இன்னையோடு ஒரு மாசம் ஆச்சா, அதான் பதிவாவும் வந்திடுச்சு. மகளுக்கு நிறைய இன்ஸ்ட்ருமென்ட்ஸ் பிடிக்கும். இருந்தாலும் flute மீது தனி விருப்பம்.

      நம்ம ஊர்ல நமக்கு விருப்பப்பட்டதை படிச்சிட முடியுமா என்ன? ஆனாலும் உங்களவர் நிலைமை கஷ்டம்தான். இப்பவும் நீங்களும், பாப்புவும் மனசு வச்சிங்கின்னா ...... விருப்பத்தை நிறைவேற்றி வைக்க‌லாமே !

      Delete
    2. பாப்பு ஆர்ப்பாட்டத்தைக் கேட்டுகிட்டு ஆஃபீஸும் போயிட்டு வரவே அவருக்கு நேரம் சரியா இருக்கு அக்கா! க்ளாஸ் போறேன்னா நான் வேணாம்னா சொல்லப்போறேன்! ;) இங்கே பியானோ க்ளாஸஸ் இருக்கு, ஆனா புல்லாங்குழல் க்ளாஸ் இருப்பது போல தெரில!

      Delete
    3. மகி,

      உங்க ஊர்ல ம்யூஸிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் விக்கிற அல்லது வாடகைக்கு விடும் கடை இருக்கான்னு பாருங்க. அங்கேயேகூட வகுப்புகள் எடுப்பாங்க. புல்லாங்குழலை அங்கேயே விலைக்கோ அல்லது வாடகைக்கோ எடுத்துக்கலாம். அங்க போனீங்கன்னா எல்லாமே தெரிஞ்சிடும். சீக்கிரமே 'வகுப்புல சேர்ந்துட்டார்'னு நல்ல செய்தி சொல்லுங்க.

      Delete
  2. எங்க ஸ்கூல் எங்க டீச்சர்....

    இனிமையான் உணர்வு அது. பள்ளிக்குச் சென்று வந்த நாட்களை நினைப்பதில் ஒரு சுகமும் ஏக்கமும் இருக்கத்தான் செய்கிறது....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கவலை இல்லாத பருவம் எல்லோருக்குமே பிடித்துப் போய்விடுகிறது. அதை நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம்.

      வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.

      Delete
  3. எங்கள் டீச்சர் என்று எங்களுக்கு மட்டுமே என்று உரிமை கொண்டாடிய நிகழ்ச்சிகளெல்லாம் நினைவு வருகிறது சித்ரா. புல்லாங்குழல் இனியோசை கேட்கக் காத்திருக்கிறேன்.
    உங்கள் மகளிடம் என் வாழ்த்துகளை சேர்த்து விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. 'உங்க டீச்சரைவிட எங்க டீச்சர்தான் அழகா இருக்காங்க' ________ இப்படி சொல்லி சகோதரியிடமும், தோழிகளிடமும் சண்டை போட்டதெல்லாம் உண்டு. வீட்டில் பூக்கும் முதல் 'பூ'வை சாமிக்கு வைப்பதைவிட டீச்சருக்குக் கொடுப்பதில்தான் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

      ம் ம் வாழ்த்துக்களை சேர்த்துவிடுகிறேன் :))

      Delete


  4. ஆஹா, ஒரு இசை மேதை உருவாகிறார்... வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் மேடம்.

    ReplyDelete
  5. இசை மேதையெல்லாம் இல்லீங்க, ம்யூஸிக்'ல ஒரு ஆர்வம், ப்ளே பண்ணும்போது மனசு லேசாகும், அவ்வளவுதான். ம் ம் வாழ்த்துக்களை சொல்லிடுறேன், நன்றிங்க.

    ReplyDelete