Sunday, July 28, 2013

ஆரஞ்சு & சிவப்பு நிற லில்லி மலர்கள் / Orange & Red Daylilies

நாங்கள் இருந்த ஊரில் வியாழ‌க்கிழமை (07/25/2013) நல்ல வெயில், அடுத்த நாளை (வெள்ளி 07/26 2013) இந்த வெயிலில் எப்படி ஓட்டுவது என நினைத்தால், காலையிலேயே பலமான‌ தூறல் !

எங்களுக்குத்தான் நனையப் பிடிக்கும் என்று நினைத்தால், இந்த ஆரஞ்சு நிற லில்லி மலர்களும்,   எங்களைப் பார்த்து 'ஹி ஹி' என்று சிரிப்பது போலவே இருந்தது.


மாலையில் பார்த்தால் (கீழேயுள்ளவை) மழை பெய்த சுவடே இல்லாமல் ஒன்றிரண்டு மழைத்துளிகளுடன் சிரித்துக்கொண்டிருந்த சிவப்பு லில்லியின் மொட்டும்,


 அதன் மலரும்.

12 comments:

  1. அழகான ஆரஞ்சு வண்ணத்தில் மனதை அள்ளி செல்கின்றன மலர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, பார்க்கவே அழகாக இருந்தது.வருகைக்கு நன்றிங்க.

      Delete
  2. Replies
    1. வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.

      Delete
  3. பூவும் பொட்டும் - ஸாரி - பூவும் மொட்டும் மழைத்துளியில் நனைந்த மலர்களும் வெகு அழகு.

    நேற்று இங்கும் மழை. என் பெண் வீட்டில் இருந்தேன். வெளியில் நிறைய புறாக்கள். மழை நீரில் விழுந்து புரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு சிறகை மட்டும் விரிந்து ஒரு பக்கம் புரண்டு நனைந்து அடுத்தாற்போல அடுத்த சிறகை விரித்து அந்தப் பக்கம் மழைநீரில் புரண்டு .... சிறகுகள் எல்லாம் மழையில் நனைந்து குண்டு குண்டாக ஒவ்வொரு புறாவும்!
    நான் என் பேரக்குழந்தைகள் எல்லோரும் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். கையில் காமிரா இருக்கவில்லை. அற்புதமான காட்சியை பிடித்து வைத்துக் கொள்ள வில்லையே என்று இருந்தது!

    இயற்கையை எத்தனை நேரம் வேண்டுமானாலும் அலுக்காமல் சலிக்காமல் ரசிக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. நானும் இந்தப் படத்தை வெளியூரில்தான் எடுத்தேன்.சிலவற்றை நினைவில் வைத்து ரசிக்க உதவுமே என்று போட்டு வைத்துள்ளேன்.

      புறாவின் குளியலை நேரில் பார்த்ததுபோலவே உள்ளது உங்கள் வர்ணனையும்.இங்கும் ஸ்ப்ரிங்க்ல‌ர் போடும்போது வெயிலுக்கு காகம், சிட்டுக்குருவி எல்லாம் பறந்துபறந்து, போய்ட்டுபோய்ட்டு வந்து குளிப்பதைப் பார்க்க அழகாக இருக்கும்.இயற்கைக்கு இணை எதுவுமே இல்லைதான்.

      Delete
  4. அழகான மலர்கள். அருமையான படப்பிடிப்பு.
    நானும் சில படம் எடுத்து முன் எப்பவோ பகிர்ந்திருந்தேன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ஐயா.

      எந்த ஆடம்பரமும் இல்லாமல் எதேச்சையாக இருக்கும் உங்கள் ப்ளாக் கிளிக்குகள் ரொம்பவே பிடிக்கும்.

      Delete
  5. ம்ம்...ஒரு வாரம் ஜாலியா ஊர் சுத்திட்டு வந்திருக்கீங்க எனத் தெரிகிறது..குடையும், மழையும், குடைக்குள் மழையும், பூக்களையும் பார்க்கையில்! :) படங்கள் அருமை..அதிலும் அந்தக் கடைசிப் பூ சூப்பர்ப்! தீஞ்சிவப்பு! எரியும் தழலை நினைவுபடுத்துகிறது அப்பூவின் பளிச் வண்ணம்! :)

    ReplyDelete
    Replies
    1. 'ஜாலியா ஊர் சுத்திட்டு'______நீங்கவேற, அடிக்கடி ஃபோன் செய்து தொந்தரவு பண்ணுவேன்னு பயந்துபோய் என்னையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டாங்க, அவ்வளவுதான்.

      'அதிலும் அந்தக் கடைசிப் பூ சூப்பர்ப்!'______ நான் நெனச்ச மாதிரியே ஆகிப்போச்சு. உங்களுக்கு ஆரஞ்சு நிறம் பிடிக்கும்னு இமா சொன்னது சரியாத்தான் இருக்கு.வருகைக்கு நன்றி மகி.

      Delete
    2. //உங்களுக்கு ஆரஞ்சு நிறம் பிடிக்கும்னு இமா சொன்னது // இதுவேறயா? எப்ப இதெல்லாம் நடந்துச்சு சித்ராக்கா?! எதுவுமே எனக்குத் தெரியாதே...அவ்வ்வ்வ்! ;) :)

      Delete
    3. "எப்ப இதெல்லாம் நடந்துச்சு சித்ராக்கா?"_____அது போஓஓன மாசம் மகி.

      http://chitrasundars.blogspot.com/2013/02/sun-setting.html#comment-form______ இங்க இருக்கு பாருங்க.

      Delete